Tuesday, January 22, 2008

மழைக்காலம்!

மழைக்கால இரவொன்றில்
மாநகரின் நெரிசலில் தப்பி
அடுக்கத்தின் அறையொன்றில்
சொற்களைக் கோர்த்துக்
கொண்டிருந்தேன்...
அமைதியான சூழலில்
எஞ்சியிருந்த தாள்களில்
நனைந்த நினைவுகளைப்
பிழிந்தபடி!

Monday, January 21, 2008

வாழ்க்கைச் சக்கரங்கள்

என்னைப் பற்றி அவளும்,
அவளைப் பற்றி நானும்,
இன்னும் சரியாக...
புரிந்து கொள்ளவே இல்லை
ஆனால்.....!
இணைப்பிரியாத தண்டவாளத்தில்
வாழ்க்கைச் சக்கரங்கள்
உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.
சத்தமிட்டபடியே.....
புறப்படும் பேருந்தின்
உள்ளேயிருந்த நீ
தவித்த தவிப்பு...
உன் விழிகளின் வழியே
புரிந்தது எனக்கு...
பிரிந்து போகும் உன்னை
பேருந்தில் ஏற்றிவிட்ட
அக்கனத்தில்...
அதே தவிப்பு எனக்கு
அறிந்தாயோ நீ....?

மெளனம் உடைக்கையில்....!

தேனாக குழைகிறது!
வெறுப்பாக வருகிறது!
முள்ளாக தைக்கின்றது!
தேள் கொடுக்காக
நஞ்தைக் கக்குகிறது...!
சில நேரங்களில்
சில பெண்கள்
மெளனம் உடைக்கையில்...!

Wednesday, January 16, 2008

லிமரைக்கூ....

*வங்கிகள் கொடுக்கும் கடன்
வட்டிக் கணக்கை பார்த்த பின்னே
வேதனை வந்திடும் உடன்.
*அறிவை வளர்க்குமிடம் பள்ளி
சகுனம் பார்த்த ஆசிரியை முறைக்க
சுவற்றில் கத்தும் பல்லி
*சிறுமிக்கு கூட திருமணம்
இன்னும் திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு மறுக்கிறார் மறுமணம்.
*சூறாவளியால் எண்ணற்றோர் பலி
எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் தீராது
பாதிக்கப் பட்டோரின் வலி.
*யானையின் பலம் தும்பிக்கை
வாழ்க்கையில் வெற்றி கிட்டும் வரையில்
நமக்கு வேண்டும் நம்பிக்கை.